Privacy policy

அந்தரங்க தரவு என்றால் என்ன?

வாசகர் வட்டம் இணையதளத்தை பயன்படுத்தும்போது, பயனர்களின் செயல்களால் தரவுகள் உருவாகின்றன. உதாரணம்: ‘பயனர் அ’ என்ற நபர் ‘புத்தகம் க’ என்ற புத்தகத்தை வாங்குகிறார். அதன் மூலம் அவர் தொடர்பான ஒரு தரவு உருவாகிறது. அதாவது, அவர் ‘புத்தகம் க’ என்ற புத்தகத்தை குறிப்பிட்ட தேதியில், நேரத்தில், விலையில் வாங்கினார் என்ற தரவு. இது அந்தரங்க தரவு. ஏனெனில், ‘பயனர் அ’ குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கினார் என்பது, அவருக்கும் புத்தகத்தை விற்றவருக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை.

 

என்னென்ன தரவுகள் சேகரிக்கப்படும்? ஏன்?

தரவு 1: பயனர் பதிவின்போதும், புத்தகங்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்கும் போதும் பயனர் உள்ளிடும் தகவல்.

ஏன் சேகரிக்கப்படுகிறது? பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட பயனர் விவரங்கள் இல்லாவிட்டால்;

பயனரின் கணக்கை பாதுகாக்க முடியாது

பயனர் வாங்கும் பொருட்களை அவரிடம் கொண்டு சேர்க்க முடியாது

தரவு 2: புத்தகம் மற்றும் பிற பொருள் வாங்கியதற்கான பதிவு

ஏன் சேகரிக்கப்படுகிறது? விற்பனையாளரான நாங்கள், இதனை, வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி சட்டங்களை கடைபிடிப்பதற்காக கண்டிப்பாக சேகரித்தாக வேண்டும்.

தரவு 3: பயனர் பதிவிடும் விருப்பம்

ஏன் சேகரிக்கப்படுகிறது? பயனரின் விருப்பங்களின் அடிப்படையில் அவருக்கு மேன்மையான புத்தகங்கள்/பொருட்களை பரிந்துரை செய்வதற்கும், சலுகைகள் வழங்குவதற்கும் இது தேவைப்படுகிறது. பயனர் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்கும்போது கூட இப்படிப்பட்ட தகவலை கடைக்காரர் நினைவில் வைத்து செயல்படுகிறார். அதன் மூலம் பயனருக்கு பிடித்த பிராண்டு பொருட்களை வழங்குகிறார்.

தரவு 4: பயனர் பதிவிடும் கருத்து

ஏன் சேகரிக்கப்படுகிறது? பயனரின் விருப்பு வெருப்புகளை புரிந்துகொள்ள இந்த தரவு தேவைப்படுகிறது. அதே நேரம், பயனர் கருத்து பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப அவருக்கு சலுகைகள் வழங்கப்படுவதால் இந்த வகை தரவு அத்தியாவசியமாகிறது.

தரவு 5: பயனரின் இணையதள பயன்பாடு பற்றிய தகவல்

ஏன் சேகரிக்கப்படுகிறது? இணையதளத்தை பயன்படுத்தும்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம். ஒருசிலருக்கு மட்டும் ஏற்படும் இவ்வகை பிரச்னைகளை அறிந்துகொள்ளவும், பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

 

சேகரிக்கப்படும் தரவுகள் எப்படி பயன்படுத்தப்படும்?

சேகரிக்கப்படும் தரவுகள் தனி பயனர்வாரியாகவும், ஏதேனும் அடிப்படையில் ஒருமித்தும், மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஆய்வு செய்யப்படும். ஆயிவின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நோக்கங்களை பூர்த்தி செய்ய முயற்சி எடுக்கப்படும்.

 

தரவுகள் யாருடன் பகிரப்படும்?

சேகரிக்கப்படும் தரவுகள், எங்களுடன் தொழில் உறவில் உள்ள நிறுவனங்கள் உட்பட யாருடனும் பகிரப்படாது. அவை, வாசகர் வட்டம் இணையதளத்தை நடத்தும் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சொத்தாக கருதப்பட்டு பாதுகாக்கப்படும்.

இதற்கு விதிவிலக்கு, அரசின் கோரிக்கை. ஒரு வேளை, சட்டப்பூர்வமாக, தரவுகளை பகிரும்படி அரசோ அதன் அங்கங்களோ கோரினாலோ உத்தரவிட்டாலோ, தரவுகள் சட்டப்படி பகிரப்படும்.

 

தரவுகள் எப்படி பாதுகாக்கப்படும்?

அந்தந்த காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு வல்லுனர்களின் பரிந்துரைக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு, தரவுகளை பாதுகாக்க முழு முயற்சி எடுக்கப்படும். அவற்றையும் மீறி, அவ்வப்போது தரவு திருட்டு சம்பவங்கள் நடப்பது பயனர்கள் அறிந்த விஷயம் தான்.

அப்படி தரவு திருட்டு நடந்தது எங்கள் கவனத்திற்கு வரும்போது, பயனர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.

 

தரவுகள் எவ்வளவு காலத்திற்கு வைத்திருக்கப்படும்?

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கும் வரை தரவுகள் சேகரத்தில் வைத்திருக்கப்படும். அதற்கு பின், சட்டத்தின் பால் அதற்கான தேவை எழவில்லை எனில், அவை யாருக்கும் பயனில்லாத வகையில் முற்றிலும் அழிக்கப்படும்.

தரவு பாதுகாப்பு சட்டமும் இந்த கொள்கையும்

தரவு பாதுகாப்பு சட்டம், அதன் விதிகள், அதன் வாயிலாக உருவாகும் ஆணையங்கள் மற்றும் முகமைகளின் ஆணைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இந்த கொள்கை மாற்றப்படலாம்.

 

மேற்படி கொள்கயில் மாற்றங்கள் எப்படி கையாளப்படும்?

மேற்படி கொள்கையை, சட்டத்தின் செயல்பாடு காரணமாகவோ வணிக காரணமாகவோ நாங்கள் மாற்றினால்; மாற்றப்பட்டதற்கான எச்சரிக்கையும் தகவலும், மின்னஞ்சல் வாயிலாக அல்லது தாங்கள் கணக்கில் நுழையும் போது தனி தகவலாக, தங்களுக்கு தெரிவிக்கப்படும்.