ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர!
அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்கிற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.
– மகாப் பெரியவர் பற்றி கவிஞர் கண்ணதாசன்.
Be the first to review “மகா பெரியவா பாகம் – 13”