சென்று தரிசிக்கக் கூடியவை
106 திருக்கோவில்கள். மீதமிரண்டும் திருமால் திருவடியைச் சேர்ந்து அதற்குப் பின் அவர் வழிகாட்டலில் நாம் தரிசிக்கக் கூடியவை.
உடலில் ஜீவன் வற்றி, தள்ளாடும் வயோதிகத்தில்,
இறைத் தலங்களுக்குச் சென்று வழிபட இயலாமல் போகும் என்பதால் இளமையிலேயே இறையனுபவமும் பெற்றிடுமாறு பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
எந்த காரணத்துக்காகவாவது ஏதேனும் ஊருக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு ஏற்பட்டால், அதையும் அங்கிருக்கும் திருக்கோவில்களை தரிசித்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.
இதற்கு பலர் வழிகாட்டியாக அமையலாம்.
முக்கியமான ஒரு வழிகாட்டி – புத்தகம். அந்த வகையில் இந்தப் புத்தகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திவ்ய தேசங்களுக்கு உங்களை பக்தியுடன், கைப்பிடித்து அழைத்துச் செல்லும் என்று உறுதியாகச் சொல்வேன்.
– பிரபு சங்கர்.
Be the first to review “108 திவ்யதேச தரிசனம் பாகம் 3”