காசி பண்பாட்டின் தலைநகரமாகவும், பழமையான கட்டடங்களின் கலை நகரமாகவும், மகான்கள் பிறந்த, வருகைதந்த, வழிபட்ட புனித நகரமாகவும் மதிக்கப்படுகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் மாடுகள், பீடா கரை படிந்த கட்டடங்கள், குறுகிய பாதைகள், குப்பைக் கூளங்களை மிதித்தபடி சென்று காசி சுவநாதரைத் தரிசித்த நிலமை இப்போது இல்லை. மயன் கட்டிய மாளிகையோ என எண்ணும் படியாக காசி விசுவநாதர் கோயில் புதுப்பொலிவு பெற்றுள்ளது. ஒவ்வொரு அங்குலமும் தங்க ஆபரணம் போல ஜொலிக்கிறது.
பழமை மாறாமல் பல நூறு கோடி ரூபாய் செலவிட்டு புதுப்பிக்கப்பட்ட காசியைக் காணும் ஆர்வம் நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வந்துள்ளது, பழைய காசியைப் பார்த்துவிட்டு இப்போது இருக்கும் காசியைப் பார்க்கும் போது வியந்து பிரமித்துப் போகதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள், அதிலும் காசி சங்கமம் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த தாகம் அதிகரித்துவிட்டது. எனது வியப்பை, காசியின் பிரமிப்பை படங்களுடன் முடிந்தவரை இந்த புத்தகத்தில் தந்துள்ளேன்.
Be the first to review “கம்பீர காசி”