கோவையில் வசிக்கும் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் இதயங்கள் என்ற அறக்கட்டளை மூலமாக முதல் வகைச் சர்க்கரை நோய் வந்த குழந்தைகளுக்கு அரிய தொண்டாற்றி வருகிறார். அவருடைய அனுபவங்கள் இந்த நூலிற்கு நிஜத்தின் வலிமையைக் கொடுக்கின்றன. பச்சைப்புடவைக்காரி என் மனதில் தோற்றுவித்த கற்பனைகள் இந்த நூலிற்குக் கற்பனையின் இனிமையையும் இறையன்பின் வீரியத்தையும் தருகின்றன. ஒரு பிறவி முழுவதும் அன்பு காட்டாமல் வாழ்ந்த ஒரு மனிதனுக்கு அடுத்தப் பிறவியில் வறுமையும் நோயும் தனிமையும் தண்டனையாகத் தரப்படுகிறது. கூடவே பராசக்தியின் அருட்பார்வையும் அவனுக்குக் கிடைக்கிறது. சக்தி என்ற பெயரில் அடுத்தப் பிறவி எடுக்கும் அந்த மனிதன் பலரையும் தன் வார்த்தைகளால் எப்படி வாழவைக்கிறான் என்பதுதான் அன்பே சக்தி என்ற இந்த நூலின் கதைச்சுருக்கம்.
Be the first to review “அன்பே சக்தி”