“என்னைக் கோவிலில் சிலையுருவில் பார்த்தாய். சித்திரங்களில் பார்த்தாய். என்னை மனித வடிவங்களிலும் பார்த்துவிட்டாய்.” “அடுத்த நிலை என்ன, தாயே?” “என்னை உன்னுள் பார்க்கப் போகிறாய்.” “உங்களை என்னுள்ளே காணும் அளவிற்கு எனக்கு ஞானம் இல்லையே, தாயே!” “காட்சி தரும் நான் அதைக் காணும் ஞானத்தைத் தரமாட்டேனா என்ன? ஆனால்…” “ஆனால்…” “இது தற்காலிக ஏற்பாடுதான். ஒரு காரணத்திற்காக மட்டும்தான்.” “என்ன காரணம், தாயே?” “வாழ்க்கையில் உன்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளை உன்னுள் இருந்தபடி நான் பார்க்கிறேன். அவற்றிலிருந்து நீ கற்க வேண்டிய பாடங்களை நான் வெளியிலிருந்து சொல்கிறேன். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்.” அப்படி உருவான நூல்தான் “அருள் மழை தாராயோ!” “இதன் சாரம் என்று எதைச் சொல்லலாம், தாயே?” “நீ என்றில்லை; யார் முயன்றாலும் என்னை அன்பு வடிவாகத் தங்களுக்குள்ளே பார்க்கலாம். என்னிடமிருந்து அன்பென்னும் பாடத்தைக் கற்கலாம்.”
Be the first to review “அருள் மழை தாராயோ”