பெருங்கடலாக விளங்கும் சனாதன தர்மத்தில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து முப்பத்தாறு வாரங்களாகத் தொகுத்து நல்முத்து மாலையாக வழங்கப்பெற்றுள்ளது. நவரத்தினங்களுள் தீட்டப்பெறாமல் இயல்பிலேயே ஒளி வீசவது முத்து ஆகும். அது போன்று இயல்பாகவே ‘அன்பொளி; வீசுகின்ற இந்து சமயத்தின் கிரணங்களை எல்லோரிடமும் பாய்ச்சுகின்ற முயற்சியே இந்நூல் ஆகும்.
ஒளி பரவும்போது அறியாமை இருள் விலகுவது இயல்புதானே! வேதங்கள், உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள். பாரதியார் பாடல், திருக்குறள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைமுறை உதாரணங்களோடு வாசகர்களின் மனதைத் தொட்டுத் திறந்திருக்கிறோம். நல்லன உலகெங்கும் பரவட்டும், அன்பும், அமைதியும் உலகினை ஆளட்டும்.
Be the first to review “இந்து சமய வாழ்வியல்…சனாதன தர்மம்”