‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்று பரவசப்பட்டான் மகாகவி பாரதி. அவன் நோக்கில் எங்கும், எந்த நிகழ்வுக்கும் அவன் வணங்கிய பராசக்தியே ஆதாரமாக இருப்பதை உணர்ந்து சிலிர்த்தான். எண்ணம் கருவாகி, செயலாக பிறப்பெடுக்கிறது. இப்படி அடிப்படையில் எண்ணம் முதலாக எல்லாமே சக்தியின் அம்சம்தான். எதையும் பிறப்பிக்கும் வகையில் எல்லாமே தாய்மையின் கருணைதான். ஓர் உயிருக்கு உடல் கொடுத்துப் பிரசவிக்கும் ஒரு பெண்தான் அந்தப்பெருமையில் எவ்வளவு சந்தோஷப்படுகிறாள்! அதேபோல அவ்வாறு பிறப்பெடுக்கும் உயிர் நலமாக, வளமாக, நீண்டநாள் வாழ்வதைக் காணவும் அவள்தான் எவ்வளவு துன்பம் மேற்கொள்கிறாள்! ஒரு மனிதத் தாய்க்கே இப்படி ஒரு பெருமை, பொறுப்பு, ஆனந்தம் என்று இருக்குமானால், இந்த பிரபஞ்சத்தையே உற்பவித்து, காத்து அருளும் அன்னை பராசக்தியின் மகிமையை என்னென்று சொல்வது!
Be the first to review “ஓம் சக்தி”