காலில் தீக்காயம் பட்டதால் கரிகாலன் ஆனவன், உறையூரில் இருந்து உன்னதமான ஆட்சி செய்தவன், உழவுத் தொழிலை ஊக்குவித்தவன், கைத்தொழிலை ஆதரித்தவன், கலைகளை போற்றியவன், நாட்டு வளத்தை பெருக்கியவன். சேர பாண்டியரோடு குறுநில வேளீர் ஒன்பது பேரை வென்றவன், இலங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டவன், காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி தமிழகத்தை செழிக்க வைத்தவன்.
பெருமை கொள்ளச் செய்யும் சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் கரிகாலனிடம் இருந்துதான் தொடங்குகிறது. இத்தனை புகழுக்குரிய கரிகால் சோழன் வரலாற்றை இனிய தமிழில் எழுச்சி நடையில் வீரம், காதல், விவேகம் என உணர்ச்சி மிகு கற்பனைகளை புகுத்தி வரலாற்று புதினமாக எழுதியிருக்கிறார். சங்ககால தமிழகத்தை மட்டுமல்ல சங்க காலத்தின் பாரதத்தினை கண்முன் காட்சிப்படுத்துகிறது நாவல்.
Be the first to review “கரிகாலன் சபதம் பாகம் 2”