ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தக் காலத்தின் தேவைக்கேற்ப மகான்கள் தோன்றுவதுண்டு. இப்போதுள்ள காலகட்டத்தின் தேவைகளுக்கேற்பத் தோன்றியவர் என்று காஞ்சி மகாசுவாமிகளைச் சொல்லவேண்டும்.
இவர் மகான் என்று சொல்லி ஒருவரை மகானாக நாமாய் அறிவித்துக் கூட்டம் சேர்ப்பது இயலாது. ஒரு மகானைப் பற்றி ஓயாமல் எடுத்துச் சொல்லியும் கூடக் கூட்டம் சேர்த்துவிட முடியாது.
குறிப்பிட்ட மகானின் அருள்சக்தி தங்கள் வாழ்வில் செயல்படுவதை அடியவர்கள் உணரும்போது மக்கள் கூட்டம் தானாய் அந்த மகானின் திருவருளில் திளைக்கும் எண்ணத்தில் திரளும். அப்படித் திரண்ட அடியவர் கூட்டம்தான் இப்போது காஞ்சி மகாசுவாமிகளைக் கொண்டாடுகிறது.
Be the first to review “காஞ்சியின் கருணைக் கடல் பாகம் 2”