இராஜராஜ சோழன் காலத்தில், சிதம்பரம் கோயிலிலே திருமுறைச் சுவடிகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு, அழிந்தது போக மீண்டும் கிடைத்தவற்றை, நம்பியாண்டார் நம்பி என்னும் அடியவர் தொகுத்த திருமுறைகளிலிருந்து இந்தத் தொகுதியில் பல்வேறு கதைகள் கையாளப்பட்டிருக்கின்றன.
இறைவனுக்கு ஒரு பச்சிலையாவது அருச்சிக்க வேண்டும், சிவபெருமான் சிறுவன் சிவநேசனைக் காப்பாற்ற எவ்வாறு கால காலனாக ஆனான், திருமூலர் எத்தனை முறை கூடு விட்டுக் கூடு பாய்ந்தார், முற்றிய பக்தியினால் நல்ல பிறப்பை அடைந்து நன்மை பெற்றது, வாழ்க்கையில் இளமை நிலையாதது, தக்கன் சிவபிரானுக்கு எதிராகச் செய்த வேள்வியின் விளைவு. அன்பின் எல்லையே சிவம் மதனாரை நெற்றிவிழியால் கரிக்கோலமிட்டது, திருநீற்றின் மகிமை, ஆமைக்குத் திருமணம், இம்மை மறுமைப்பயன், அருள் பெற்ற மகாபலி சக்ரவர்த்தி, இறைவன் தாளினை இப்பொழுதே மனதில் எழுதிவைக்க வேண்டும்.
Be the first to review “திருமுறையுள் கருத்தும் கதையும் பாகம்-2”