நமது புராணக் கதைகளில் சுவையான சம்பவங்களுக்குக் குறைவேயில்லை. ஆனால் அவை தற்காலப் பிரச்னைகள் பலவற்றுக்கும் தீர்வாக அமைகின்றன என்பதை அற்புதமாக யோசித்திருக்கிறார் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.
‘அட, இந்தக் கோணத்திலும் பிரச்னைகளை அணுகித் தீர்வு காணலாமே’
என்கிற எண்ணத்தை நம்முள் விதைக்கிறார். புராணங்கள் என்பவை கதைகள் மட்டுமல்ல. பழுத்த அனுபவங்கள். அவற்றின் சாரத்தில் இருந்து கற்றுக் கொள்ள இன்றைய மக்களுக்கு (முக்கியமாக இளைஞர்களுக்கு) எவ்வளவோ உள்ளன. அவற்றை எளிய முறையில் மிகச்சுவையாக இந்த நூலில் இணைத்துத் தருகிறார் நூலாசிரியர் ஜி.எஸ்.எஸ்.
Be the first to review “நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்”