‘வேலுண்டு வினை தீர்க்க, மயிலுண்டு எனைக் காக்க…’ என்ற பாடல், முருகனுடைய நேரடி பார்வைகூட வேண்டாம்; அவனுடைய வேலும், மயிலுமே நம் குறைகளைத் தீர்க்கும்; வேதனைகளைக் களையும் என்று உறுதியாகச் சொல்கிறது. நல்லோர் மேலும் மேன்மை பெறவும், தீயோர் மனந்திருந்தி நல்வாழ்வு பெறவும் முருகன் வழி காட்டுகிறான். தன்னை எதிர்ப்போரையும் தன்னோடு அரவணைத்துச் சென்று ஆதரிக்கும் அருங்குணத்தோன் அவன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அழகன் ஆறுமுகன் ஆறு படைவீடுகளில் கொலுவிருந்து அருட்செல்வத்தை வாரி வாரி வழங்குகிறார் முருகன்.
– பிரபுசங்கர்
Be the first to review “முருகா (அறுப்படையின் புராண கதை)”