நல்ல மனம் அமைய நல்ல சிந்தனை வேண்டும். நல்ல சிந்தனைகள் வளர நல்லோர் உறவு வேண்டும். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என உளமாற நினைக்க வேண்டும். நல்லோரின் அருட்சக்தி நம்மை ஆட்கொள்ளும், நல்ல உயர் சிந்தனைகளை ஏற்படுத்தும். ஆதிசங்கரர் இதையே ‘ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்’ என்று சொல்கிறார். நல்லோரின் உறவால் நம்மைச்சுற்றி ஆனந்த சாகர அலைகள் (Divine Vibrations) எப்பொழுதும் இருக்கும். அதை அதிகரிப்பது நம் கையில் (நம்சிந்தனையில்) உள்ளது. சதா இறைவன் நினைவும் உறுதுணையாய் இருக்கும். What you think that you become என்ற அடிப்படையில் நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாக மாறுகிறாய்.
Be the first to review “விட்டலனை நாடி”