நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம் அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்து விடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பது தான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும் எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு கூடவே பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அன்னையின் சூட்சும வடிவம்… அன்பு தேடி ஏங்குபவர்களை அரவணைக்கும் அட்சயபாத்திரமாகவே விளங்கும் என்பதை தன் புத்தகங்கள் வழியே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
–எம்.எம்.ஜெ.,
Be the first to review “வீணையடி நீ எனக்கு”