தமிழ் இலக்கியம், ஒவ்வொரு புது எழுத்தாளரது வருகையினாலும் சிறப்படைகிறது. அவர்கள் தங்கள் அனுபவத்தின் வாயிலாக புதிய உலகத்தை நம் முன்னே விரித்துக் காட்டுகிறார்கள். பலவிதமான சுவையும் அனுபவமும் தேடும் ஒரு வாசகனுக்கு இத்தகைய புதிய எழுத்துகள் தான் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகின்றன.
பெரியவர்களுக்கே இத்தகைய புதுமை வேண்டியிருக்கும் பதின்பருவத்தினர் எதிர்பார்ப்பு எவ்வளவு அதிகமாக இருக்கும். அவர்கள் இன்னும் கனவு நிரம்பியவர்கள். யதார்த்த வாழ்க்கையின் தீமைகள் இன்னும் தீண்டப்படாதவர்கள். அவர்களுடைய உலகத்தின் வண்ணங்களும் சித்திரங்களும் இன்னும் வேறு மாதிரியானவை.
இத்தகைய இளையோர் உலகத்துக்கு தன்னுடைய எழுத்துகளால் வளம் சேர்க்க வந்துள்ளார் இந்தத் தொகுதியின் ஆசிரியர் லோகேஷ் மீரா.
தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழும் இத்தகைய இளையோரை மையப்படுத்தியே வெளியிடப்படுகிறது. அவர்களுடைய தேவைக்கேற்ப, அவர்களுடைய உலகைப் பிரதிபலிக்கக்கூடிய கதைகளை நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் தான் எழுத்தாளர் லோகேஷ் மீரா முக்கியத்துவம் பெறுகிறார். இயல்பாகவே இவர் எடுத்துக்கொள்ளும் கதைக்களமும், பாத்திரங்களும், அவர்களுடைய உணர்வுகளும் இளையோர் தேவைகளை ஒட்டியே அமைந்துள்ளன!
Weight | 0.200 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “வைரவழி”