இறைவனிடம் உயர்வு, தாழ்வு என்கிற எந்த வேறுபாடும் இல்லை. பிறப்பு, கல்வி, செல்வம், பணி என்று ஏதாவது ஒன்றை முன்வைத்து உயர்வு தாழ்வுகளை ஏற்படுத்தி எவரையும் பிரித்துப் பார்ப்பதில் இறைவனுக்கு விருப்பமுமில்லை. இறைவன் அனைவரையும் சமநிலையில் காணவே விரும்புகிறார்.
வெளிப்படையாகத் தெரியும் உருவங்களையோ, உடற்குறைபாடுகளையோ வைத்து எவரையும் குறைவாக மதிப்பிடுவது தவறானது. மேலும், அவர்களுடைய உடற்குறைகளைச் சுட்டிக்காட்டி அவர்களை வருந்தச் செய்யும் செயல்களைச் செய்யவும் கூடாது.
பெண்களின் அழகைக் கண்டு ஆண்களின் மனம் தடுமாற்றமடையலாம். அந்தத் தடுமாற்றத்தில் இருந்து உடனடியாக வெளியேறி விட வேண்டும். அதை விடுத்து, அந்த அழகில் மனம் மகிழ்ந்து, அந்த மயக்கத்திலேயே மூழ்கிப்போய் விடக்கூடாது.
Be the first to review “சாப விமோசனக் கதைகள்”