திரும்பி பார்க்கிறேன்

எஸ்.ரஜத்

150.00

“ஒரே நேரத்தில் முப்படைத் தளபதிகளாக

3 தமிழர்கள் விபரம் அறிய…”

எஸ்.ரஜத் – தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழின் பிரபல இதழ்கள் அனைத்திலும், இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய பல கட்டுரைத் தொடர்கள், புத்தகமாகவும் வெளிவந்துள்ளன. இதுவரை, 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி, தமிழ் எழுத்துலகில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர். சென்னை பாரி அண்டு கம்பெனியில் விற்பனை வரி, வாட் வரி நிபுணராக, பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்திற்காக துளசிதாசர் என்ற புத்தகத்தை ரஜத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இந்தியாவின் பிரபல வி.ஜ.பி.,களில் பெரும்பாலானவரை சந்தித்து, பேட்டி எடுத்துள்ளார். அப்படி அவர்களை சந்திக்கும் போது, தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை, பகிர்ந்து கொள்ளும் கட்டுரைத் தொடர் இது. பேட்டி, கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு இவரது அனுபவங்கள் நல்ல வழிகாட்டியாக அமையும்.