திருவண்ணாமலை, நினைத்தாலே முக்தி தரக் கூடிய பெருமையை உடைய மலை. ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் இம்மலையின் மகத்துவம் சொல்லற்கரியது. யுகங்கள் மறைந்தாலும் தான் மறையாது நிலைத்திருக்கும் இம்மலையை நாடி எண்ணற்ற சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், ஞானிகள் வந்து அருள் பெற்றுள்ளனர். இவர்களில் இளம் வயதிலேயே ஆன்மீகப் பாதையில் ஈர்க்கப்பட்டு துறவியானவர்களும் உண்டு. சம்சார வாழ்க்கையில் ஈடுபட்டு பின் ஆன்ம ஞானம் அடைந்தவர்களும் உண்டு, அத்தகைய தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும் யோகிகளும் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு, தம் தவ ஆற்றலால் அருள்பாலித்து அவர்கள் தம் வாழ்க்கையை உயர்த்துகின்றனர். ஆன்மீக மறுமலர்ச்சியை அவர்கள் வாழ்வில் உண்டாக்குகின்றனர். அத்தகைய மகான்களுள் குறிப்பிடத்தக்க சில மகான்களைப் பற்றிப் பேசுகிறது இந்நூல்.
Weight | 0.300 kg |
---|---|
Dimensions | 22 × 14 × 1 cm |
Authors | |
Pages | |
Published Year |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “திருவண்ணாமலை மகான்கள்”