உங்கள் அன்பைப் பற்றி எழுதிவிட்டேன், நீங்கள் தாயாக வந்ததை, தோழியாக வந்ததைப் பற்றியெல்லாம் எழுதிவிட்டேன். மரணத்தைப் பற்றிக்கூட எழுதிவிட்டேன். அடுத்து என்ன எழுதட்டும்?’’ ‘‘என்னுடைய அவதாரத்தைப் பற்றி எழுதேன்.’’ ‘‘எந்த அவதாரம், தாயே? மகிஷாசுரமர்த்தினியா. இல்லை மலையத்துவஜ பாண்டியன் மகாகப் பிறந்த மீனாட்சியா?’’ ‘‘அதெல்லாம் எப்போதோ நடந்தது. இப்போது நான் மக்கள் மத்தியில் பிறந்தால் …’’ ‘‘அவதரிக்கப் போகிறீர்களா?’’ ‘‘ஆம். முழுக்க முழுக்க உன் கற்பனையில்.’’ ‘‘நல்லோரைக் காக்க, தீயோரை அழிக்க, அறத்தை நிலைநாட்ட – இதற்காகத்தானே அவதாரம்?’’ ‘‘இல்லை. ‘அன்பே நான், நானே அன்பு,’ என்ற அடிப்படை ஆன்மீக உண்மையை மானிடர்களுக்குப் புரியவைக்க.’’ ‘‘அவதாரம் எப்போது நிகழப் போகிறது, தாயே!’’ ‘‘ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது, பல வருடங்களுக்கு முன்னால் நீ எழுதிய கதை ஒன்றில் நான் ஒரு பெண்ணின் பாத்திரத்தை ஏற்றேன்.
Be the first to review “நிலவென வாராயோ”