ஒரு சமூகம் தான் சிக்குண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறத் தவித்து, அந்தத் தவிப்பு தவமாகி தகிக்கும்போதுதான் ஒரு மகாகவி தோன்றுகிறான். தமிழ்நாட்டின் தவப்பயனாக பாரத மாதாவின் புதல்வனாகத் தோன்றியவன் பாரதி. அவனுடைய எழுத்தே அவன் விட்டுச் சென்றிருக்கும் தவம். நாம் வளர வளர, வானம்போல் அவன் வளர்வதால், அவன், நமக்குப் பின்வரும் தலைமுறைகளுக்குச் சொந்தமும் தேவையுமாகின்றான். காலம் தாண்டிச் சிந்தித்த அமர கவியை ஒரு கட்டுக்குள் அடைக்க முடியாது.
Be the first to review “பாமரன் பார்வையில் பாரதி”