ராமபிரானின் புதல்வர்களான லவகுசர்களின் கதையை அறிந்தவர்கள் குறைவு. ராமனின் பிறப்பு, காட்டுக்கு சென்றது, அனுமனுடன் அன்பு, ராவணனை வென்றது, பட்டம் சூட்டியது உள்ளிட்ட விபரங்கள் நம் நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு கூட தெரியும். ஆனால் அவரது சகோதரர்களான லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோரின் குடும்பம், அவர்களது குழந்தைகள், அவர்கள் ஆட்சி செய்த நாடுகள், சீதையின் தாய், மனிதனாய் பிறந்த ராமபிரான் மறைந்தது, அந்தத் தலைவன் மீது கொண்ட அன்பால் அவரோடு மடிந்து போனவர்களின் பட்டியல் ஆகியவை லவகுசர்களின் வரலாறைப் படித்தால் தான் புரியும். அது மட்டுமல்ல! லவகுசர்கள் தங்கள் சித்தப்பாமார்களுடன் போரிட்டு ஜெயித்த காட்சிகள், இளம் தலைமுறையினருக்கு ரசனையாக இருக்கும். ராமனுக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தது, அவளது கணவர், அவள் செய்த தியாகம், அவள் யாருடைய மகள், அவள் தன் தம்பிமார்களுடன் வளராமல் தனித்து வளர்ந்தது என அத்தனையுமே, இந்த நுõலில் வித்தியாசமாக தந்துள்ளேன். ராமபிரானுக்கு அயோத்தியில், கோவில் எழுந்து வரும் இந்த வேளையில், அனைவரும் அமோக வரவேற்பு தருவீர்கள் என நம்புகிறேன்.
Be the first to review “லவகுசா”