விட்டலன் எனப்படும் பாண்டுரங்கனை அணுகுவதற்கு மிக எளிதான ஒரு வழி உண்டு. அது நாம சங்கீர்த்தனம். பாடலிலும் ஆடலிலும் பக்தனுக்கு மிக நெருக்கமாக வரக் கூடியவன் விட்டலன். இதற்கு எடுத்துக்காட்டு அவனது நெருங்கிய நண்பர்களாகவும் பக்தர்களாகவும் விளங்கிய பலர். அவர்கள் பாடிய அபங்கங்களில் இந்த நெருக்கம் மிக அழகாக வெளிப்படுகிறது.
விட்டலனை அணுக மற்றொரு எளிய வழியும் உண்டு என்று தோற்றுகிறது, ‘சந்த்’கள் எனப்படும் அவரது அணுக்கமான பக்தர்களின் சரிதத்தை மனம் ஒன்றிப் படிப்பது.
Be the first to review “விட்டலனின் விளையாட்டு”